/உள்ளூர் செய்திகள்/சேலம்/தம்பியை தாக்கிய அண்ணன்; கள்ளக்காதலி மீது வழக்குதம்பியை தாக்கிய அண்ணன்; கள்ளக்காதலி மீது வழக்கு
தம்பியை தாக்கிய அண்ணன்; கள்ளக்காதலி மீது வழக்கு
தம்பியை தாக்கிய அண்ணன்; கள்ளக்காதலி மீது வழக்கு
தம்பியை தாக்கிய அண்ணன்; கள்ளக்காதலி மீது வழக்கு
ADDED : ஜூன் 20, 2024 07:25 AM
ஓமலுார்: ஓமலுார், பெரியேரிப்பட்டியை சேர்ந்தவர் தனசேகர், 32.
கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி, 30. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த சகோதரர், கூலித்தொழிலாளி சேகர், 45. இவர் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பார்வதி, 32, என்பவருடன் பழகி வந்துள்ளார். நேற்று முன்தினம் தனசேகர், அண்ணன் வீட்டுக்கு சென்றார். அப்போது, சேகரும் பார்வதியும் சேர்ந்து தனசேகரை திட்டி இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். காயம் அடைந்த தனசேகர், ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று அளித்த புகார்படி சேகர், பார்வதி மீது கொலை முயற்சி உள்பட, 4 பிரிவுகளில் தொளசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.