/உள்ளூர் செய்திகள்/சேலம்/தனியார் பஸ் முன் படுத்து ஊராட்சி தலைவர் தர்ணாதனியார் பஸ் முன் படுத்து ஊராட்சி தலைவர் தர்ணா
தனியார் பஸ் முன் படுத்து ஊராட்சி தலைவர் தர்ணா
தனியார் பஸ் முன் படுத்து ஊராட்சி தலைவர் தர்ணா
தனியார் பஸ் முன் படுத்து ஊராட்சி தலைவர் தர்ணா
ADDED : ஜூன் 20, 2024 07:25 AM
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி ஊருக்குள், பஸ்கள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே செல்வதால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை, 5:30 மணிக்கு சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற தனியார் பஸ், காரிப்பட்டி ஊருக்குள் வராமல், நெடுஞ்சாலையில் காரிப்பட்டி பயணியரை இறக்கி விட்டு சென்றது. அப்போது அந்த பஸ்சை, காரிப்பட்டி ஊராட்சி தலைவர் மனோசூரியன் விரட்டி சென்றார். தொடர்ந்து மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில், தனியார் பஸ் முன் தரையில் படுத்து, போராட்டத்தில் ஈடுபட்டார். வாழப்பாடி போலீசார் பேச்சு நடத்திய பின், மனோசூரியன் நகர்ந்து வழி விட்டார். இச்சம்பவத்தால் சுங்கச்சாவடியில், 15 நிமிடம் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.