/உள்ளூர் செய்திகள்/சேலம்/மொபட் மீது லாரி மோதல்; கூலித்தொழிலாளி சாவுமொபட் மீது லாரி மோதல்; கூலித்தொழிலாளி சாவு
மொபட் மீது லாரி மோதல்; கூலித்தொழிலாளி சாவு
மொபட் மீது லாரி மோதல்; கூலித்தொழிலாளி சாவு
மொபட் மீது லாரி மோதல்; கூலித்தொழிலாளி சாவு
ADDED : ஜூன் 20, 2024 07:25 AM
காடையாம்பட்டி: காடையாம்பட்டி தாலுகா கொங்கரப்பட்டியை சேர்ந்த, கூலித்தொழிலாளி அருள்தாஸ், 55.
இவரது மனைவி அந்தோணியம்மாள், 50. இவர்களுக்கு, 3 குழந்தைகள். நேற்று காலை, 11:00 மணிக்கு, அருள்தாஸ், டி.வி.எஸ்., மொபட்டில் தீவட்டிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஜோடுகுழி அருகே சென்றபோது, அவரது மொபட் பின்புறம், சரக்கு லாரி மோதியது. இதில் சம்பவ இடத்தில் அருள்தாஸ் உயிரிழந்தார். லாரியை விட்டு தப்பி ஓடிய டிரைவரை, தீவட்டிப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.