/உள்ளூர் செய்திகள்/சேலம்/புள்ளியியல் துறையினர் பள்ளியில் துாய்மை பணிபுள்ளியியல் துறையினர் பள்ளியில் துாய்மை பணி
புள்ளியியல் துறையினர் பள்ளியில் துாய்மை பணி
புள்ளியியல் துறையினர் பள்ளியில் துாய்மை பணி
புள்ளியியல் துறையினர் பள்ளியில் துாய்மை பணி
ADDED : ஜூன் 22, 2024 12:59 AM
சேலம்: மத்திய புள்ளியியல் துறையின், சேலம் துணை மண்டல அலுவலகம் சார்பில், 'துாய்மை பாரதம்' திட்டத்தில், ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் துாய்மை பணி நேற்று நடந்தது.
அலுவலக கண்காணிப்பாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். அதில் பள்ளி வளாகம், மைதானத்தில் இருந்த குப்பை அகற்றி சுத்தம் செய்யப்பட்டன. இதில் அலுவலக ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, 10,000 ரூபாய் மதிப்பில் பள்ளிக்கு குப்பை தொட்டி உள்ளிட்ட துாய்மை உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளி, வீடு, பொது இடங்களில் துாய்மையை கடைப்பிடிப்பேன் என மாணவ, மாணவியர், புள்ளியியல் துறை அலுவலக ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தலைமை ஆசிரியர் சிவசங்கர்(பொ), ஆசிரியர்கள் பங்கேற்றனர்.