முனியப்பன் கோவிலில் சிறப்பு அபிேஷகம்
முனியப்பன் கோவிலில் சிறப்பு அபிேஷகம்
முனியப்பன் கோவிலில் சிறப்பு அபிேஷகம்
ADDED : ஜூன் 22, 2024 12:59 AM
இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே உள்ள சூளை முனியப்பன் கோவிலில், புதிதாக இரு முனியப்பன் சுவாமிகள், கன்னிமார், முன்னுடையன் சுவாமிகள் செய்யப்பட்டு கடந்த, 9ல் கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மண்டல பூஜை நிறைவு நாளையொட்டி சுயம்பு சுவாமிகளுக்கு பால், தயிர், திருநீறு, திருமஞ்சனம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் உள்பட பல்வேறு திவ்ய பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின், 108 வலம்புரி சங்குகளால் அபிஷேகம் செய்து, 108 மூலிகைகளால் வேள்வி பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.