நாளை ருத்ர ஏகாதசினி தன்வந்திரி ேஹாமம்
நாளை ருத்ர ஏகாதசினி தன்வந்திரி ேஹாமம்
நாளை ருத்ர ஏகாதசினி தன்வந்திரி ேஹாமம்
ADDED : ஜூன் 22, 2024 12:59 AM
சேலம்: சேலம், சின்ன திருப்பதி பாலா தேவஸ்தானத்தின் மஹா பெரியவா இல்லம், லஷ்மி நரசிம்ம பக்த ஜன சபா சார்பில் ருத்ர ஏகாதசினி, தன்வந்திரி ேஹாமம் நாளை நடக்க உள்ளது.
உலக சேஷமத்தை முன்னிட்டு, அஸ்தம்பட்டி பாரதி சூப்பர் மார்க்கெட் வளாகத்தின், 4வது மாடியில் உள்ள பாரதி பார்ட்டி ஹாலில், இந்நிகழ்ச்சி நடக்க உள்ளது.நாளை காலை, 7:00 மணிக்கு கணபதி பூஜையுடன் ேஹாமம் நடக்க உள்ளது. தொடர்ந்து ருத்ர பாராயணம், 108 பாண லிங்கம், மரகத லிங்கம், ஸ்படிக லிங்கம், நவபாஷாண லிங்கம், வெள்ளி லிங்கம், 16 முகம் கொண்ட பிரம்ம லிங்கம் ஆகிய லிங்க மூர்த்திகளுக்கு, 11 வகை திரவியங்களால் அபி ேஷகம் நடத்தப்பட உள்ளது. 10:00 மணிக்கு ருத்ர ேஹாமம், தன்வந்திரி ேஹாம பூஜை, 11:00 மணிக்கு அர்ச்சனை, மஹா தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அனுமதி இலவசம். தகவலுக்கு, 94421- 91793, 88389-11220 என்ற எண்களில் அழைக்கலாம்.