/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஜமாபந்தியில் 67 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிஜமாபந்தியில் 67 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவி
ஜமாபந்தியில் 67 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவி
ஜமாபந்தியில் 67 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவி
ஜமாபந்தியில் 67 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவி
ADDED : ஜூன் 22, 2024 12:53 AM
சேலம்: சேலம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடந்தது. அதில் மக்களிடமிருந்து, கலெக்டர் பிருந்தாதேவி மனுக்களை பெற்றார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:தாசில்தர் அலுவலகத்தில் கடந்த, 18 முதல், இதுவரை பனமரத்துப்பட்டி, வலசையூர், சேலம் நகரம் ஆகிய குறுவட்டங்களுக்கு ஜமாபந்தி நடந்தது. இதில் பனமரத்துப்பட்டியில், 453, வலசையூரில், 519 என, 972 மனுக்கள் பெறப்பட்டு, உரிய துறை அலுவலர்களிடம், நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக அங்கு மக்களின் பல்வேறு மனுக்களுக்கு தீர்வு கண்டு, 67 பயனாளிகளுக்கு, 15.31 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் வழங்கினார். அதேபோல் சங்ககிரி தாலுகாவில், ஜமாபந்தி அலுவலர் லோகநாயகியிடம், 506 மனுக்களை மக்கள் வழங்கினர்.
100 மனுக்களுக்கு தீர்வுவாழப்பாடி தாலுகா அலுவலகத்தில், கடந்த, 18 முதல், நேற்று வரை, பேளூர், அருநுாற்றுமலை, காரிப்பட்டி, வாழப்பாடி ஆகிய குறுவட்டத்தில் உள்ள, 64 ஊராட்சிகளில் இருந்து, 1,246 மனுக்கள் வழங்கப்பட்டன. இதில், நத்தம் பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல் உள்பட, 100 மனுக்களுக்கு உடனே தீர்வு காணப்பட்டு, டி.ஆர்.ஓ., மேனகா, பயனாளிகளிடம் நேற்று பட்டா உள்ளிட்டவற்றை வழங்கினார். இதில் தாசில்தார் ஜெயந்தி உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.