ADDED : ஜூன் 28, 2025 04:04 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,000க்கும் மேற்-பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அதன் வளாகத்தில் ஆங்காங்கே முட்புதர் மண்டியுள்ளதால், பாம்புகள் அதிகளவில், 'உலா' வருகின்றன.
நேற்று மதியம், 2:45 மணிக்கு, மாணவர் கழிப்பறையில், ஒரு பாம்பு புகுந்தது. மாணவர்கள் பார்த்து, அல-றியடித்து ஓடினர். பின் ஒரு ஆசிரியர் உதவியுடன் பாம்பை அப்பு-றப்படுத்தினர். ஏற்கனவே கடந்த, 13ல், வகுப்பறையில் பாம்பு புகுந்து, 9ம் வகுப்பு மாணவியை தீண்டி, அவர் சிகிச்சையில் உள்ளார். மாணவியர் விடுதியிலும் பாம்பு புகுந்து அச்சுறுத்தியது. இதனால் மாணவ, மாணவியர், அச்சமடைந்துள்ளதால், புதரை அகற்றி, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.