/உள்ளூர் செய்திகள்/சேலம்/வீரகனுாரில் ஆட்டுச்சந்தை நடத்தக்கோரி சாலை மறியல்வீரகனுாரில் ஆட்டுச்சந்தை நடத்தக்கோரி சாலை மறியல்
வீரகனுாரில் ஆட்டுச்சந்தை நடத்தக்கோரி சாலை மறியல்
வீரகனுாரில் ஆட்டுச்சந்தை நடத்தக்கோரி சாலை மறியல்
வீரகனுாரில் ஆட்டுச்சந்தை நடத்தக்கோரி சாலை மறியல்
ADDED : ஜூன் 28, 2025 04:04 AM
தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுாரில், சனிதோறும் ஆட்டுச்சந்தை கூடியது. அங்கு ஆட்டுக்கு தலா, 100 ரூபாய் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர். இதனால் கடந்த, 21ல், தெடாவூரில் ஆட்டுச்சந்தை நடத்த, வியாபாரிகள் அனுமதி கேட்டனர். அதற்கு, தி.மு.க.,வை சேர்ந்த, தலைவர் வேலு, இடம் ஒதுக்கி, ஒரு மாதத்துக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதில்லை என கூறினார். இதனால் அன்று, வியாபாரிகள், அங்கு சந்தையை நடத்தினர். இந்நிலையில் இன்று கூடும் சந்தைக்கு, நேற்று மாலை, வியாபாரிகள் தெடாவூருக்கு வந்தனர். விவசாயிகளும், ஆடுகளை வாகனங்களில் கொண்டு வந்தனர்.
ஆனால் நேற்று, தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் டவுன் பஞ்சா-யத்து தலைவர் ஆறுமுகம் தலைமையில் மக்கள், வீரகனுார் போலீசில் மனு அளித்தனர். அதில், 'தெடாவூரில் அனுமதியின்றி ஆட்டுச்சந்தை நடத்துவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரகனுாரில் ஆட்டுச்சந்தை தொடர்ந்து நடத்த அனு-மதிக்க வேண்டும்' என கூறியிருந்தனர்.
தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு, வீரகனுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே, ஆத்துார் - பெரம்பலுார் தேசிய நெடுஞ்சாலையில் மறி-யலில் ஈடுபட்டனர். போலீசார், டவுன் பஞ்சாயத்து அலுவ-லர்கள், பேச்சு நடத்தி, கலெக்டரிடம் தெரிவித்து உரிய தீர்வு காணப்படும் என கூறினர். இதனால் இரவு, 7:30 மணிக்கு, மறி-யலை கைவிட்டனர். இச்சம்பவத்தால் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.