Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பசுமை வனம் அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு: பனமரத்துப்பட்டி ஏரி புதுப்பொலிவு பெற வாய்ப்பு

பசுமை வனம் அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு: பனமரத்துப்பட்டி ஏரி புதுப்பொலிவு பெற வாய்ப்பு

பசுமை வனம் அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு: பனமரத்துப்பட்டி ஏரி புதுப்பொலிவு பெற வாய்ப்பு

பசுமை வனம் அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு: பனமரத்துப்பட்டி ஏரி புதுப்பொலிவு பெற வாய்ப்பு

ADDED : ஜூன் 28, 2025 04:03 AM


Google News
சேலம்: ''பனமரத்துப்பட்டி ஏரியின் ஒரு பகுதியில், 55 ஏக்கரில், 25 கோடி ரூபாயில், நகர்புற பசுமை வனங்கள் அமைக்க நிதி ஒதுக்-கப்பட்டுள்ளது,'' என, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சேலம் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. அதில், தி.மு.க., கவுன்சிலர்கள் பேசியதாவது:

தெய்வலிங்கம்(9வது வார்டு): மாநகராட்சியில் நாய் தொல்லை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன், அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கை, இடையில் நிறுத்தப்-பட்டதால்

கட்டுக்கடங்காமல் அதிகரித்துவிட்டது. இதனால் உரிய நடவ-டிக்கை எடுக்க

வேண்டும்.

கோபால்(58வது வார்டு): அம்பாள் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, நிலத்தடி நீரும் விஷமாக மாறி வருகி-றது. ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். மூணாங்க-ரடு உள்ளிட்ட பகுதிகளில் பல குடியிருப்புகள் மலை மேல் உள்-ளன. அவர்களிடம், பாதாள சாக்கடைக்கு வரி வசூலிக்கப்படுகி-றது. அங்கு சாக்கடை வசதி கூட இல்லை. இதனால் அவர்க-ளுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும்.

ராஜ்குமார்(13வது வார்டு): அஸ்தம்பட்டி உழவர் சந்தை முன் ஏராளமான கடைகள் உருவாகிவிட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி நேரத்தில் குழந்தைகள் அவதிக்கு ஆளாகின்-றனர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்.

பழனிசாமி(51வது வார்டு): சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகு-தியில் தினமும், 10,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்-கின்றனர். அங்கு கழிப்பறை, நிழற்கூடம் அமைக்க வேண்டும்.

மேயர் ராமச்சந்திரன்: பனமரத்துப்பட்டி ஏரியின் ஒரு பகுதியில், 55 ஏக்கரில், 25 கோடி ரூபாயில், நகர்புற பசுமை வனங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 4 மண்டலங்களிலும் உள்ள, 119 திறந்தவெளி கிணறுகளை புனரமைக்க, 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பேசினர்.

கடந்த, 15 ஆண்டுக-ளாக வறண்டுள்ள ஏரியில், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. தற்போது நகர்புற பசுமை வனங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்த ஏரியின் ஒரு பகுதி, புதுப்பொலிவு பெற வாய்ப்பு

ஏற்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us