/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முதல்முறை மினி பஸ் இயக்கம் நெய்யமலை மக்கள் மகிழ்ச்சி முதல்முறை மினி பஸ் இயக்கம் நெய்யமலை மக்கள் மகிழ்ச்சி
முதல்முறை மினி பஸ் இயக்கம் நெய்யமலை மக்கள் மகிழ்ச்சி
முதல்முறை மினி பஸ் இயக்கம் நெய்யமலை மக்கள் மகிழ்ச்சி
முதல்முறை மினி பஸ் இயக்கம் நெய்யமலை மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 28, 2025 04:03 AM
ஆத்துார்: முதல்முறையாக நெய்ய
மலைக்கு மினி பஸ் இயக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பஸ் வசதி இல்லாத கிராம பகுதிகளை, நகர் பகுதிகளுடன் இணைக்கும்படி, புது வழித்தடங்களை கண்டறிந்து மினி பஸ் இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆத்துார், கெங்க-வல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி தாலுகா பகுதிகளில், 22 தடங்கள் கண்டறியப்பட்டன.
அதில் மினி பஸ் இயக்க, தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்-டது. அதன்படி, ஆத்துார் நகராட்சிக்கு உட்பட்ட உப்பு ஓடை, சிலோன் காலனி, சந்தனகிரியில் இருந்து, ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டுக்கு நேற்று மினி பஸ் இயக்கப்பட்டது.
அதேபோல் தும்பலில் இருந்து நெய்யமலைக்கு மினி பஸ் முதன்-முதலாக நேற்று இயக்கப்பட்டதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்-தனர்.
இதுகுறித்து ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோ-தரன் கூறுகையில், ''22 புது தடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்-டுள்ளது. ஏற்கனவே இயக்கப்பட்ட, 9 மினி பஸ்களின் தடம் நீட்-டிக்கப்பட்டுள்ளது. புது தடத்தில், 3 பஸ்கள் இயக்கப்பட்டுள்-ளது. மீதி இடங்களில், புது பஸ்களை வாங்கி இயக்குவதாக, அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். முதல்முறையாக நெய்யமலைக்கு மினி பஸ் இயக்கப்பட்டதால், மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்,'' என்றார்.