/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்
ADDED : செப் 12, 2025 01:43 AM
சேலம், :சேலம் மேற்கு மாவட்ட செயலரும், எம்.பி.,யுமான செல்வகணபதி வெளியிட்ட அறிக்கை:
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் இன்று (12ம் தேதி) மாலை 5:00 மணியளவில் இடைப்பாடியில் உள்ள, ஸ்ரீ நடராஜன் மஹால் திருமண மண்டபத்தில், மாவட்ட அவைத் தலைவர் தங்கமுத்து தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள்,இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, ஆதி திராவிடர் நலக்குழு, மீனவர் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, சிறுபான்மை நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்று சூழல் அணி, அயலக அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகியவற்றின் மாவட்ட அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி சேலம் வருகை குறித்தும், செப்., 15ல், அண்ணாதுரை பிறந்த நாள், ஓரணியில் தமிழ்நாடு,- ஓட்டுச்சாவடி அளவிலான உறுதிமொழி முன்மொழிவு கூட்டம், செப்., 17ம் தேதி கரூரில் நடைபெறும்முப்பெரும் விழா குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இவ்வாறு கூறியுள்ளார்,