Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'அன்புமணியை நீக்க பா.ம.க., ராமதாசுக்கு உரிமை இல்லை'

'அன்புமணியை நீக்க பா.ம.க., ராமதாசுக்கு உரிமை இல்லை'

'அன்புமணியை நீக்க பா.ம.க., ராமதாசுக்கு உரிமை இல்லை'

'அன்புமணியை நீக்க பா.ம.க., ராமதாசுக்கு உரிமை இல்லை'

ADDED : செப் 12, 2025 01:42 AM


Google News
சேலம், ''அன்புமணியை நீக்கும் அதிகாரம் ராமதாசுக்கு இல்லை; பொதுக்குழுவிற்கு மட்டும்தான் உள்ளது,'' என, வன்னியர் சங்க மாநில செயலர் கார்த்தி கூறினார்.

பா.ம.க.,வில் தந்தை, மகன் இடையே, சில மாதங்களாக கட்சியில் தலைவர் பதவி யார் என்பது குறித்து, உச்சக்கட்ட போராட்டம் நடந்து வருகிறது. நேற்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி பா.ம.க.,வில் வகித்து வந்த செயல் தலைவர் பொறுப்பில் இருந்தும், கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்குவதாக அறிவித்தார். இது நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், வன்னியர் சங்க மாநில செயலருமான கார்த்தி கூறியதாவது:

அன்புமணியை ராமதாஸ் நீக்கியது தொடர்பாக, இரண்டு நாட்களில் அன்புமணி அறிக்கை வெளியிடுவார். அன்புமணியை நீக்கும் அதிகாரம் ராமதாசுக்கு இல்லை. பொதுக்குழுவிற்கு மட்டும்தான் உள்ளது. ராமதாஸ் கட்சியின் நிறுவனர் தானே தவிர, அவருக்கு அதிகாரம் இல்லை, கட்சி அவர் கைக்கு போகாது. இப்பவும் சரி, எதிர்காலத்திலும் சரி, நான் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள், எப்போதும் அன்புமணி பக்கம்தான் இருப்போம்.

சட்ட விதிகளின்படி, கட்சியை தொடங்கியது, வழி நடத்தியது ராமதாஸ் தான். ஆனால், தலைவர் என்ற பதவியை பொதுக்குழு கூடிய போது, அன்புமணிக்கு ராமதாஸ்தான் கொடுத்தார்.

எனவே, தலைவர் பதவியை பொதுக்குழு தான் தேர்தெடுத்தது. தலைவர் பதவியை நீக்குவதற்கும் பொதுக்குழுவிற்கு தான் அதிகாரம் உள்ளது. இதை முடிவு செய்வதும் பொதுச்செயலருக்கு மட்டுமே உரிமை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, பா.ம.க., மாநில இணை பொதுச்செயலரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அருள் கூறுகையில், '' அன்புமணி கட்சியில் வகித்த பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவி நீக்கியது குறித்து, எனக்கு ஒன்றும் தெரியாது. நான் வெளியூரில் இருப்பதால் தகவல் தெரியாது. இருப்பினும் அன்புமணி நீக்கியது தொடர்பாக, கருத்து சொல்ல விருப்பம் இல்லை,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us