/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விண்வெளி தொழில்நுட்ப கண்காட்சி வாகனத்தை கண்டு ரசித்த மாணவர்கள் விண்வெளி தொழில்நுட்ப கண்காட்சி வாகனத்தை கண்டு ரசித்த மாணவர்கள்
விண்வெளி தொழில்நுட்ப கண்காட்சி வாகனத்தை கண்டு ரசித்த மாணவர்கள்
விண்வெளி தொழில்நுட்ப கண்காட்சி வாகனத்தை கண்டு ரசித்த மாணவர்கள்
விண்வெளி தொழில்நுட்ப கண்காட்சி வாகனத்தை கண்டு ரசித்த மாணவர்கள்
ADDED : செப் 12, 2025 01:42 AM
சேலம், அரசு கலைக்கல்லுாரிக்கு வந்த, நடமாடும் வின்வெளி தொழில்நுட்ப கண்காட்சி வாகனத்தை ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
தேசிய அறிவியல் அருங்காட்சியக குழுமம், மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் மையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக, மனிதனின் அன்றாட வாழ்க்கையில் வின்வெளி தொழில்நுட்பங்களின் பங்கு என்ற தலைப்பில் நடமாடும் கண்காட்சி வாகனம் அமைத்து, மாவட்டம் தோறும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பார்வையிட செய்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று சேலம் குமாரசாமிபட்டி அரசு கலைக்கல்லுாரிக்கு, விண்வெளி தொழில்நுட்ப கண்காட்சி வாகனம் கொண்டு வரப்பட்டது. இதில் பால்வெளி, விண்வெளியின் மேற்பரப்பு, செயற்கை கோள்களின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அவை செயல்படும் விதம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏராளமான மாணவர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர். இத்துடன் அறிவியல் கண்டுபிடிப்புகளின் மாதிரிகள், புத்தக கண்காட்சி, வீடியோ விளக்கம் என விண்வெளி தொடர்பாக, தமிழ்நாடு அறிவியல் இயக்க அறிவியல் ஒருங்கிணைப்பாளர் பசுபதி மாணவர்களுக்கு விளக்கினார்.
ஏற்பாடுகளை, தமிழ்நாடு அறிவியல் இயக்க சேலம் மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் காட்வின், முன்னாள் மாவட்ட செயலாளர் லால் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.