/உள்ளூர் செய்திகள்/சேலம்/சிமென்ட் கடையில் ரூ.2.50 லட்சம், நகை திருட்டுசிமென்ட் கடையில் ரூ.2.50 லட்சம், நகை திருட்டு
சிமென்ட் கடையில் ரூ.2.50 லட்சம், நகை திருட்டு
சிமென்ட் கடையில் ரூ.2.50 லட்சம், நகை திருட்டு
சிமென்ட் கடையில் ரூ.2.50 லட்சம், நகை திருட்டு
ADDED : ஜூலை 20, 2024 08:35 AM
சேலம்: சேலம், இரும்பாலை அடுத்த ஜாகீர்ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் மோகனசுந்தரம், 28. இவர், அங்குள்ள சோளம்பள்ளத்தில், சிமென்ட், இரும்பு வியாபாரம் செய்கிறார். நேற்று முன்தினம் அவருக்கு, சிமென்ட் லோடு வந்தது.
அதை குடோனில் இருப்பு வைக்கும் பணியின் போது, மோதிரம், பிரேஸ்லட் ஆகியவற்றை கழற்றி, கல்லாப்பெட்டியில் வைத்துள்ளார். அத்துடன் அன்று விற்பனை மூலம் கிடைத்த, 2.50 லட்சம் ரூபாயையும் வைத்து பூட்டிவிட்டு, இரவு 7:00 மணிக்கு வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை, 8:30 மணிக்கு கடைக்கு வந்தபோது, ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த, இரண்டரை பவுன் மதிப்பிலான நகை, 2.50 லட்சம் திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.