/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சாலையோர இறைச்சி கடைகள் போக்குவரத்து நெரிசலால் அவதி சாலையோர இறைச்சி கடைகள் போக்குவரத்து நெரிசலால் அவதி
சாலையோர இறைச்சி கடைகள் போக்குவரத்து நெரிசலால் அவதி
சாலையோர இறைச்சி கடைகள் போக்குவரத்து நெரிசலால் அவதி
சாலையோர இறைச்சி கடைகள் போக்குவரத்து நெரிசலால் அவதி
ADDED : செப் 15, 2025 01:09 AM
பனமரத்துப்பட்டி:ஞாயிறுதோறும், பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டையில், சேலம் சாலையில், திறந்தவெளியில் ஆடு, மீன், கோழி, பன்றி இறைச்சி கடைகள் வைக்கின்றனர்.
வாடிக்கையாளர்கள், சாலையில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு, இறைச்சி கடைக்கு செல்கின்றனர். அந்த நேரத்தில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இறைச்சி துண்டுகளை எதிர்பார்த்து, தெருநாய்கள் கும்பலாக சாலையில் வலம் வருகின்றன. இறைச்சி கடை உள்ள பகுதியை கடந்து செல்வதற்கும், வாகன ஒட்டிகள் சிரமப்படுகின்றனர். மக்களும், நாய் கடிக்கு ஆளாகும் ஆபத்து உள்ளது.
அதனால் நவீன இறைச்சி கூடம் அமைக்க வேண்டும். மேலும் சாலையோரம், போக்குவரத்துக்கு இடையூறாக செயல்படும் இறைச்சி கடைகளை இடமாற்ற வேண்டும்.