/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மது, கஞ்சா பறிமுதல்: 4 பேருக்கு 'காப்பு' மது, கஞ்சா பறிமுதல்: 4 பேருக்கு 'காப்பு'
மது, கஞ்சா பறிமுதல்: 4 பேருக்கு 'காப்பு'
மது, கஞ்சா பறிமுதல்: 4 பேருக்கு 'காப்பு'
மது, கஞ்சா பறிமுதல்: 4 பேருக்கு 'காப்பு'
ADDED : செப் 15, 2025 01:09 AM
சேலம்:சேலம், சீலநாயக்கன்பட்டி அடுத்த தலைமலை, திடீர் நகரை சேர்ந்தவர் முருகன், 43. இவர், வீடு அருகே கஞ்சா விற்று வந்தார்.இதை தட்டிக்கேட்ட, அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன், 53, என்பவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார், நேற்று முருகனை கைது செய்து, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் கருப்பூர் அடுத்த வட்டக்காடு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா, 38. அரசு மதுபானங்களை மொத்தமாக வாங்கி, வீட்டில் பதுக்கி அதிக விலைக்கு விற்று வந்தார். அவரது வீட்டில், கருப்பூர் போலீசார் சோதனை செய்து, 30 'குவார்ட்டர்' பாட்டில்களை பறிமுதல் செய்து, ராஜாவை கைது செய்தனர்.
மேலும் சேலம், லைன் ரோட்டை சேர்ந்த சரவணன், 50, செவ்வாய்ப்பேட்டை, சுண்ணாம்புக்கார தெருவில், மதுபானங்களை நேற்று முன்தினம் விற்றார். அவரை கைது செய்த போலீசார், 20 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பத்தாங்கல் மேடு பகுதியில், காரிப்பட்டி போலீசார் ரோந்து சென்றபோது, காட்டுவேப்பிலைப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன், 53, மதுபானம் விற்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 15 பாட்டில்கள்
பறிமுதல் செய்தனர்.