/உள்ளூர் செய்திகள்/சேலம்/ போதை மாத்திரை விற்ற கவுன்சிலர் மகன் கைது போதை மாத்திரை விற்ற கவுன்சிலர் மகன் கைது
போதை மாத்திரை விற்ற கவுன்சிலர் மகன் கைது
போதை மாத்திரை விற்ற கவுன்சிலர் மகன் கைது
போதை மாத்திரை விற்ற கவுன்சிலர் மகன் கைது
ADDED : செப் 15, 2025 02:06 AM
இடைப்பாடி:மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற, தி.மு.க., நகராட்சி கவுன்சிலரின் மகன் உட்பட, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, அரசு போக்குவரத்து பணிமனை எதிரே, காலி வீட்டு மனைகளில் சிலர், போதை மாத்திரை விற்பதாக, இடைப்பாடி போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், ஒருவருக்கு, போதை மாத்திரையை விற்ற ஐந்து பேரை சுற்றி வளைத்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில், இடைப்பாடி நகராட்சி, 3வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் பிச்சமுத்துவின் மகன் சுரேஷ்குமார், 28, ராஜசேகர், 21, சேலம் ஐ.டி.ஐ.,யில் படிக்கும் மாணவர் அமர்நாத், 22, ஜீவா, 21, சசிகுமார், 23, என தெரிந்தது.
மேலும் இவர்கள், இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷன் எதிரே, தனியார் விடுதியில் தங்கி, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, போதை மாத்திரைகளை விற்றது தெரிந்தது. விடுதியில் சோதனை செய்த போலீசார், போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, ஐவரையும் கைது செய்தனர்.