ADDED : செப் 15, 2025 01:08 AM
ஆத்துார்:ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வெள்ளப்பிள்ளையார் கோவிலில், வரும் நவம்பரில் கும்பாபி ேஷகம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம், பாலாலயம் செய்வதற்கான யாக பூஜை தொடங்கியது. நேற்று, 2ம் கால பூஜை, கோ பூஜை நடந்தது.
தொடர்ந்து மூலவர் பிள்ளையார், பாலசுப்ரமணியர், மகாலிங்கேஸ்வரர், நவகிரஹ சுவாமி உருவங்களை, அத்தி மரத்தில் பொறித்து, திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
அத்தி மரத்தில் உருவம் பொறித்த சுவாமிகளை, பக்தர்கள் வழிபட்டனர். பின் அன்னதானம் வழங்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் ஸ்டாலின், செயல் அலுவலர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.