/உள்ளூர் செய்திகள்/சேலம்/ரிசர்வ் வங்கி புது நடைமுறை; விவசாயிகள் ஆர்ப்பாட்டம்ரிசர்வ் வங்கி புது நடைமுறை; விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ரிசர்வ் வங்கி புது நடைமுறை; விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ரிசர்வ் வங்கி புது நடைமுறை; விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ரிசர்வ் வங்கி புது நடைமுறை; விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 31, 2025 06:22 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. அதில் பங்கேற்க வந்த விவசாயிகள், அதன் சங்க பிரதிநிதிகள், அதன் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ரிசர்வ் வங்கயின் நகைக் கடன் புது நடைமுறைகளை வாபஸ் பெற வலியுறுத்தி, பிரதமர், நிதி அமைச்சர், நிதித்துறை செயலர், கவர்னருக்கு மனு அனுப்பியுள்ளோம். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்த நகைகள் புதுப்பித்தலுக்கு புதிய நடைமுறையில் வட்டி, அசல் இரண்டையும் செலுத்த வேண்டும். ஏழை விவசாயிகளுக்கு இது சிரமமானது. அதனால் பழைய முறையில் வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும் மொத்த மதிப்பில், 75 சதவீதம் மட்டும் கடன் வழங்கப்படும் என்ற நடைமுறையால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.