/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தென்னை நார் மதிப்பு கூட்டல்; தொழில்நுட்ப செயல் விளக்கம் தென்னை நார் மதிப்பு கூட்டல்; தொழில்நுட்ப செயல் விளக்கம்
தென்னை நார் மதிப்பு கூட்டல்; தொழில்நுட்ப செயல் விளக்கம்
தென்னை நார் மதிப்பு கூட்டல்; தொழில்நுட்ப செயல் விளக்கம்
தென்னை நார் மதிப்பு கூட்டல்; தொழில்நுட்ப செயல் விளக்கம்
ADDED : மே 31, 2025 06:22 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், 'அட்மா' திட்டத்தில் விவசாயிகளுக்கு தென்னை நார் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி நேற்று நடந்தது. சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் கோகிலா, தென்னை நார் கயிறு, மட்கும் உரம் தயாரித்தல் குறித்து விளக்கினார்.
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய மேலாளர் செல்வராஜ், தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு மற்றும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்பாடு மேலாண்மை பற்றி விளக்கினார். வேளாண் அலுவலர் புவனேஸ்வரி, வேளாண் திட்டங்கள், மானியங்கள் குறித்தும், அட்மா தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, தென்னையில் பூச்சி மோலாண்மை பற்றியும், துணை தோட்டக்கலை அலுவலர் வெங்கடாசலம், சாகுபடிக்கு ஏற்ற தென்னை ரகம், சாகுபடி தொழில்நுட்பம் குறித்தும் விளக்கினார்.