Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/மொபைல் டவரில் ஏறிய பரோட்டா மாஸ்டர் மீட்பு

மொபைல் டவரில் ஏறிய பரோட்டா மாஸ்டர் மீட்பு

மொபைல் டவரில் ஏறிய பரோட்டா மாஸ்டர் மீட்பு

மொபைல் டவரில் ஏறிய பரோட்டா மாஸ்டர் மீட்பு

ADDED : மே 31, 2025 06:21 AM


Google News
மேட்டூர்: மேச்சேரி, பாரக்கல்லுாரை சேர்ந்த, பரோட்டா மாஸ்டர் சக்திவேல், 34. இவரது மனைவி, குடும்ப தகராறில், 2 வயது பெண் குழந்தையுடன், கே.ஆர்.தோப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு, 20 நாட்களுக்கு முன் சென்றார்.

இந்த விரக்தியில் இருந்த சக்திவேல் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு அருகே உள்ள, 100 அடி உயர மொபைல் கோபுர உச்சிக்கு சென்று தற்கொலை செய்து கொள்ள போவதாக கூச்சலிட்டார். மக்கள் தகவல்படி, நங்கவள்ளி தீயணைப்பு வீரர்கள், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, அங்கு சென்று சக்திவேலுவிடம் பேச்சு நடத்தி, பின் கயிறு கட்டி, 4:00 மணிக்கு அவரை மீட்டனர்.மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us