/உள்ளூர் செய்திகள்/சேலம்/கணவருடன் செல்ல மனைவிகள் மறுப்பு; போலீசாருடன் 4 மணி நேரம் உறவினர்கள் வாக்குவாதம்கணவருடன் செல்ல மனைவிகள் மறுப்பு; போலீசாருடன் 4 மணி நேரம் உறவினர்கள் வாக்குவாதம்
கணவருடன் செல்ல மனைவிகள் மறுப்பு; போலீசாருடன் 4 மணி நேரம் உறவினர்கள் வாக்குவாதம்
கணவருடன் செல்ல மனைவிகள் மறுப்பு; போலீசாருடன் 4 மணி நேரம் உறவினர்கள் வாக்குவாதம்
கணவருடன் செல்ல மனைவிகள் மறுப்பு; போலீசாருடன் 4 மணி நேரம் உறவினர்கள் வாக்குவாதம்
ADDED : ஜூலை 10, 2024 07:13 AM
இடைப்பாடி: திருப்பதி அருகே அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் ஜப்பான், 58.
இவரது மகன் கோபால், 28. இவருக்கும் பண்ருட்டி அருகே நடுப்பட்டியை சேர்ந்த எம்.ஜி., மகள் மீனா, 25, என்பவருக்கும், 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. தொடர்ந்து மீனாவின் தங்கை வேளாங்கண்ணி, 23, என்பவரை, கோபால் திருமணம் செய்து கொண்டார்.கோபால், அவரது இரு மனைவிகளுக்கு பிரச்னை ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்ட மீனா, வேளாங்கண்ணி, கொங்கணாபுரம் வந்துவிட்டனர். அங்கு சந்தைப்பேட்டையில் ஒரு மாதமாக தங்கி ஊசி, பாசி விற்று வந்தனர். நேற்று முன்தினம் கோபால், மனைவிகளை கண்டுபிடித்து தருமாறு கொங்கணாபுரம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் ஸ்டேஷன் பின்புறம் அவரது மனைவிகள் இருப்பது தெரிந்தது. இதையறிந்து ஜப்பான் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு, கோபால் தகவல் கொடுத்தார். திருப்பதியில் இருந்த அவர்கள், பஸ் மூலம் நேற்று கொங்கணாபுரம் வந்தனர்.போலீசார் விசாரித்தபோது கோபாலின் இரு மனைவிகளும் திருப்பதி செல்ல மறுத்துவிட்டனர். அதேநேரம், அவர்கள் வராமல் செல்ல மாட்டோம் என, 50க்கும் மேற்பட்டோர், போலீசாரிடம், 4 மணி நேரத்துக்கு மேல் வாக்குவாதம் செய்தனர். ஒருவழியாக, கோபாலுடன் செல்ல மீனா விருப்பம் தெரிவித்தார். வேளாங்கண்ணி, பெற்றோருடன் கொங்கணாபுரத்தில் தங்கி உள்ளதால் இங்கேயே இருப்பேன் என பிடிவாதமாக கூறிவிட்டார். இதனால் கோபால், மீனா, உறவினர்கள், திருப்பதி புறப்பட்டனர்.