/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கபினி நிரம்ப தேவை 1 டி.எம்.சி., தண்ணீர்; உபரி நீர் விரைவில் காவிரியில் திறக்க வாய்ப்பு கபினி நிரம்ப தேவை 1 டி.எம்.சி., தண்ணீர்; உபரி நீர் விரைவில் காவிரியில் திறக்க வாய்ப்பு
கபினி நிரம்ப தேவை 1 டி.எம்.சி., தண்ணீர்; உபரி நீர் விரைவில் காவிரியில் திறக்க வாய்ப்பு
கபினி நிரம்ப தேவை 1 டி.எம்.சி., தண்ணீர்; உபரி நீர் விரைவில் காவிரியில் திறக்க வாய்ப்பு
கபினி நிரம்ப தேவை 1 டி.எம்.சி., தண்ணீர்; உபரி நீர் விரைவில் காவிரியில் திறக்க வாய்ப்பு
ADDED : ஜூலை 10, 2024 07:26 AM
மேட்டூர்: கர்நாடகாவின் கபினி அணை நிரம்ப இன்னமும் ஒரு டி.எம்.சி., நீர் மட்டுமே தேவைப்படுகிறது. வரும் நாட்களில் அணைக்கு வரும் நீர் உபரியாக வெளியேற்ற வாய்ப்புள்ளது.
கர்நாடகாவில் காவிரி, துணையாறுகள் குறுக்கே கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதில், கபினி, கே.ஆர்.எஸ்., மொத்த நீர் கொள்ளளவு, 19.5, 49.5 டி.எம்.சி.,யாகும்.இதில், நேற்று கபினி அணை நீர் கொள்ளளவு, 18.5, கே.ஆர்.எஸ்., கொள்ளளவு, 25.5 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. இதில், கபினி நிரம்ப ஒரு டி.எம்.சி., கே.ஆர்.எஸ்., நிரம்ப, 24.5 டி.எம்.சி., நீர் தேவை.நேற்று இரு அணைகளுக்கும் சராசரியாக வினாடிக்கு, 6,000 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதில், கபினியில், 2,000 கனஅடி, கே.ஆர்.எஸ்.,ல், 500 கனஅடி என மொத்தம், 2,500 கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. கபினி அணை நிரம்ப இன்னமும் ஒரு டி.எம்.சி., நீர் தேவை. இன்று கபினி நிரம்பும் என்பதால் அணைக்கு வரும் நீர் உபரியாக காவிரியாற்றில் வெளியேற்ற வாய்ப்புள்ளது. அதற்கேற்ப மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிக்கும்.
நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்ததால் கடந்த, 30ல், மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 227 கன அடியாக இருந்த நீர்வரத்து, ஜூலை, 1ல் 1,038 கன அடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் , 2,149, நேற்று, 3,341 கன அடியாக மேலும் உயர்ந்தது. அதற்கேற்ப நேற்று முன்தினம், 40.22 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று, 40.59 அடியாக அதிகரித்தது.