விரட்டி கடித்த நாய் 6 பேர் 'அட்மிட்'
விரட்டி கடித்த நாய் 6 பேர் 'அட்மிட்'
விரட்டி கடித்த நாய் 6 பேர் 'அட்மிட்'
ADDED : ஜூலை 10, 2024 07:13 AM
நங்கவள்ளி: நங்கவள்ளி, சாணார்பட்டி ஊராட்சி சப்பாணிப்பட்டி காட்டுவளவை சேர்ந்த விவசாயி சின்னையன், 65.
இவரது மனைவி தங்கமணி, 60. இவர்கள் வீட்டில் நாய் வளர்த்தனர். நேற்று மதியம் அந்த நாய், சின்னையனை கடித்தது. தடுக்க முயன்ற தங்கமணியையும் கடித்தது. பின் வீட்டில் இருந்து வெளியே வந்த நாய், அப்பகுதியை சேர்ந்த வெங்கடாசலம், 60, அங்கப்பன், 75, காசிகவுண்டர், 55, மட்டுமின்றி, 17 வயது சிறுவனையும் கடித்தது. 6 பேரும், மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், 6 முதல் 8 அங்குல ஆழம் வரை கடித்திருந்ததால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவர்களை உள் நோயாளிகளாக அனுமதித்தனர். மேலும் அந்த நாய் இறந்து விட்டதால், நங்கவள்ளி அரசு மருத்துவமனை அலுவலர்கள், பள்ளம் தோண்டி புதைத்தனர்.