ADDED : மே 25, 2025 01:18 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி ஊராட்சி சின்னகொழிஞ்சிப்பட்டியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஜருகுமலையில் இருந்து வரும் மழைநீர், சின்னகொழிஞ்சிப்பட்டியில் தேங்கி, வீடுகளில் புகுந்து விடுகிறது.
இதனால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'மழைநீர் குடியிருப்பு பகுதியில் நுழைவதை தடுக்க, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், 100 மீட்டர் நீளத்துக்கு தடுப்புச்சுவர் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது. அப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் வடிந்த பின், தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கும். ஜருகுமலையில் இருந்து வரும் மழை நீர், பூலாவரி ஏரியை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.