/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மில் ஓனரிடம் ரூ.32 லட்சம் மோசடி மேச்சேரி வாலிபருக்கு 'காப்பு' மில் ஓனரிடம் ரூ.32 லட்சம் மோசடி மேச்சேரி வாலிபருக்கு 'காப்பு'
மில் ஓனரிடம் ரூ.32 லட்சம் மோசடி மேச்சேரி வாலிபருக்கு 'காப்பு'
மில் ஓனரிடம் ரூ.32 லட்சம் மோசடி மேச்சேரி வாலிபருக்கு 'காப்பு'
மில் ஓனரிடம் ரூ.32 லட்சம் மோசடி மேச்சேரி வாலிபருக்கு 'காப்பு'
ADDED : மே 25, 2025 01:26 AM
சேலம் :திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஜோதியம்பட்டியை சேர்ந்தவர் சொக்கநாதன், 39. இவருக்கு காங்கேயத்தில், சொந்தமாக காட்டன் நுால் மில் உள்ளது. அதை விரிவாக்கம் செய்ய, 1.50 கோடி ரூபாய் தேவைப்பட்டது.
சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த பொட்டனேரியை சேர்ந்த முருகன், 36; ஒரு ரூபாய் வட்டிக்கு பணம் ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார். அதை நம்பிய சொக்கநாதன், கடந்த, 22ல், சேலம் வந்ததும், அவருடன் தனியார் ஓட்டலில் வைத்து,
முருகன் பேச்சு நடத்தி உள்ளார். அப்போது நிரப்பப்படாத, 15 காசோலை, ஆதார் கார்டு, போட்டோவை கேட்டு பெற்று, அதை வைத்து மோசடியில் ஈடுபட திட்டமிட்டார். அதன்படி சொக்கநாதன் வழங்கிய செக்கை, வங்கிக்கு அனுப்பி, அவரது கணக்கில் இருந்து, 32 லட்சம் ரூபாயை முருகன் சுருட்டிக்கொண்டார்.இதையறிந்த சொக்கநாதன், பணத்தை திருப்பி தரும்படி பலமுறை கேட்டும், அவர் உடன்படவில்லை. இதனால் சூரமங்கலம் போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, முருகனை நேற்று கைது செய்தனர். மோசடி செய்த, 32 லட்சம் ரூபாயையும் மீட்டனர்.