ADDED : மே 25, 2025 01:18 AM
சேலம் :சேலம், உடையாப்பட்டி, குண்டுக்கல்லுாரை சேர்ந்தவர் ஜெகதீஷ், 26. இவர் அம்மாபேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் வாகன கண்டக்டராக உள்ளார்.
கடந்த, 14 இரவு, 10:00 மணிக்கு, அவரது பல்சர் பைக்கை வீடு முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை காணவில்லை. அதன் மதிப்பு, 45,000 ரூபாய். இதுகுறித்து நேற்று முன்தினம் அவர் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.