/உள்ளூர் செய்திகள்/சேலம்/பெரியார் பல்கலையில் ஜூலை 19ல் பொது கலந்தாய்வு மூலம் நேரடி சேர்க்கைபெரியார் பல்கலையில் ஜூலை 19ல் பொது கலந்தாய்வு மூலம் நேரடி சேர்க்கை
பெரியார் பல்கலையில் ஜூலை 19ல் பொது கலந்தாய்வு மூலம் நேரடி சேர்க்கை
பெரியார் பல்கலையில் ஜூலை 19ல் பொது கலந்தாய்வு மூலம் நேரடி சேர்க்கை
பெரியார் பல்கலையில் ஜூலை 19ல் பொது கலந்தாய்வு மூலம் நேரடி சேர்க்கை
ADDED : ஜூலை 16, 2024 02:04 AM
ஓமலுார்: பெரியார் பல்கலையில், பொது கலந்தாய்வு மூலம், நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.இது குறித்து, சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெக-நாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: பெரியார் பல்கலையில், 2024-25ம் கல்வியாண்டிற்கான எம்.ஏ.,பொருளியல், சமூகவியல், வரலாறு, தமிழ், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், இதழியல் மற்றும் மக்கள் தொடர்-பியல் (5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு), எம்.எஸ்சி., நுாலகம் மற்றும் தகவல் அறிவியல், உயிர்வேதியியல், உயிர்புள்ளியியல், ஆற்றல் அறிவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பியல், உயிர் மருத்துவ அறிவியல், தாவரவியல், விலங்கியல், சுற்றுச்-சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் (5 ஆண்டு ஒருங்கி-ணைந்த படிப்பு), எம்.எட்., கல்வியியல், எம்.டெக்.
ஆற்றல் அறி-வியல் மற்றும் தொழில்நுட்பவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு, பொதுகலந்தாய்வு வழியாக நேரடி மாணவர் சேர்க்கை நடைபெ-றவுள்ளது. பொது கலந்தாய்வு வரும், 19 காலை, 10:00 மணிக்கு பல்கலை கலையரங்கில் நடைபெறவுள்ளது. மேலே உள்ள பாடப்பிரிவுகளுக்கு, நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, தமிழ்-நாடு அரசு விதிகளின் படி நேரடியாக சேர்க்கை நடைபெறவுள்-ளது. உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் உரிய சான்றி-தழ்கள் மற்றும் கட்டணத்தை செலுத்தி நேரடியாக சேர்ந்து கொள்-ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.