Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/நிழற்கூடத்துக்கு வண்ணம் தீட்டி ஓவியம்; 'நான் இந்து அல்ல' வாசகத்தால் சர்ச்சை

நிழற்கூடத்துக்கு வண்ணம் தீட்டி ஓவியம்; 'நான் இந்து அல்ல' வாசகத்தால் சர்ச்சை

நிழற்கூடத்துக்கு வண்ணம் தீட்டி ஓவியம்; 'நான் இந்து அல்ல' வாசகத்தால் சர்ச்சை

நிழற்கூடத்துக்கு வண்ணம் தீட்டி ஓவியம்; 'நான் இந்து அல்ல' வாசகத்தால் சர்ச்சை

ADDED : ஜூலை 05, 2024 01:05 AM


Google News
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார், மந்தைவெளி வழியே, ஆத்துார் - கடம்பூர் நெடுஞ்சாலை செல்கிறது.

அதில் மந்தைவெளி பஸ் ஸ்டாப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டிருந்த நிழற்கூடம் சேதமடைந்து இருந்தது. அப்பகுதி இளைஞர்கள் சிலர், நிழற்கூடத்தை சுத்தம் செய்து, வண்ணம் தீட்டினர். அதில் அம்பேத்கர், புத்தர் உருவ படங்கள் வரைந்தனர். ஒரு பகு-தியில், மாணவர் புத்தகம் படிப்பது போன்ற ஓவியம் வரைத்து, அவரது கையில் உள்ள புத்தகத்தின் முன்புறம், 'நான் இந்து அல்ல' என எழுதப்பட்டுள்ளது. ஆனால் அரசு சார்பில் கட்டப்-பட்ட நிழற்கூடத்தில் எழுதப்பட்ட வாசகத்தால் சர்ச்சை எழுந்-துள்ளது.இதுகுறித்து, ஆத்துார், 26வது வார்டு, காங்., கவுன்சிலர் தேவேந்-திரன் கூறுகையில், ''அம்பேத்கர் கூறிய வாசகத்தை தான் எழுதி-யுள்ளனர். இவை பவுத்தம் வளர்ச்சியை தான் காட்டுகிறது,'' என்றார்.ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமாரிடம் கேட்டபோது, ''அரசு சார்ந்த கட்டடம், சுவர்களில் மதம் சார்ந்த கருத்துகளை எழுதக்கூடாது. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us