/உள்ளூர் செய்திகள்/சேலம்/விபத்தில் 5 பேர் பலி; பஸ் டிரைவரின் லைசென்ஸ் 5 ஆண்டுக்கு ரத்துவிபத்தில் 5 பேர் பலி; பஸ் டிரைவரின் லைசென்ஸ் 5 ஆண்டுக்கு ரத்து
விபத்தில் 5 பேர் பலி; பஸ் டிரைவரின் லைசென்ஸ் 5 ஆண்டுக்கு ரத்து
விபத்தில் 5 பேர் பலி; பஸ் டிரைவரின் லைசென்ஸ் 5 ஆண்டுக்கு ரத்து
விபத்தில் 5 பேர் பலி; பஸ் டிரைவரின் லைசென்ஸ் 5 ஆண்டுக்கு ரத்து
ADDED : ஜூலை 05, 2024 01:05 AM
சேலம்: சேலம் வீராணம், சுக்கம்பட்டி அரசு பள்ளி அருகே, கடந்த, 12ல் டாரஸ் லாரி மெதுவாக சென்றது.
அதை தொடர்ந்து இரு பைக்-குகள் சென்றன. அதற்கு பின்னால், வேகமாக வந்த தனியார் பஸ், பைக்குகள் மீது மோதி, லாரியுடன் சேர்த்து நசுக்கியது. இதில் வீராணத்தை சேர்ந்த வேதவள்ளி, 28, குழந்தை ரித்திகா, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த முருகன், அவரது மனைவி நந்தினி, குழந்தை கவின் உயிரிழந்தனர். வீராணம் போலீசார் வழக்குப்ப-திந்து, தனியார் பஸ் டிரைவரான ரமேஷ், 29, என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவ-லர்கள், ரமேஷிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். இதன்படி ரமேஷின் ஓட்டுனர் உரிமத்தை, 5 ஆண்டுக்கு ரத்து செய்து, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் நேற்று உத்தரவிட்டார்.