/உள்ளூர் செய்திகள்/சேலம்/பிறப்பு, இறப்பு பதிவு செய்ய தவறினால் காலதாமத கட்டணம் செலுத்த வேண்டும்பிறப்பு, இறப்பு பதிவு செய்ய தவறினால் காலதாமத கட்டணம் செலுத்த வேண்டும்
பிறப்பு, இறப்பு பதிவு செய்ய தவறினால் காலதாமத கட்டணம் செலுத்த வேண்டும்
பிறப்பு, இறப்பு பதிவு செய்ய தவறினால் காலதாமத கட்டணம் செலுத்த வேண்டும்
பிறப்பு, இறப்பு பதிவு செய்ய தவறினால் காலதாமத கட்டணம் செலுத்த வேண்டும்
ADDED : ஜூலை 05, 2024 01:05 AM
சேலம்: பிறப்பு, இறப்பு பதிவு செய்ய தவறினால் தாமத கட்டணம் செலுத்த நேரிடும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் அறிக்கை: மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பிறப்பு, இறப்புகளை, 21 நாட்-களில் கட்டணமின்றியும், அதற்கு மேல், 30 நாட்கள் வரை பதிவு செய்யாமல் இருந்தால், 100 ரூபாய் தாமத கட்டணம் செலுத்த வேண்டும்.
30 நாட்களுக்கு மேல் ஓராண்டு வரை பதிவு செய்-யாமல் இருந்தால், 200 ரூபாய் தாமத கட்டணம், ஓராண்டுக்கு மேல் பதிவு செய்யாமல் இருந்தால், ஆர்.டி.ஓ., உத்தரவுப்படி, 500 ரூபாய் தாமத கட்டணம் செலுத்த வேண்டும்.பிறந்த குழந்தை பெயரை, பிறப்பு பதிவு செய்த நாள் முதல், ஓராண்டுக்குள் கட்டணமின்றி திருத்தம் செய்யலாம். அதாவது குழந்தை பிறப்பு நிகழ்ந்த பகுதியில் பிறப்பு, இறப்பு பதிவாளர் அலுவலகம் சென்று ஏற்கனவே பதிவிறக்கம் செய்த சான்றிதழ்-களில் ஏதும் பிழை இருப்பின் திருத்தம் செய்து பதிவு செய்-யலாம். குழந்தை பிறந்த நாளில் இருந்து, 15 ஆண்டுக்குள், குழந்தையின் பெயரை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மாந-கராட்சி எல்லைக்குள், 2017 டிச., 31 வரை பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை, www.tnurbanepay.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம். 2018 ஜன., 1 முதல், பதிவு செய்த சான்றிதழ்களை www.crstn.org என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம். இது-தொடர்பான சந்தேகங்களை, மாநகராட்சி அலுவலக அறை எண்: 215-ல் அணுகி, விபரம் பெறலாம். இடைத்தரகர்களை அணுகி ஏமாற வேண்டாம்.