Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/வன உரிமை பட்டா கேட்ட மக்கள் நீதிமன்றம், அரசை அணுக அறிவுரை

வன உரிமை பட்டா கேட்ட மக்கள் நீதிமன்றம், அரசை அணுக அறிவுரை

வன உரிமை பட்டா கேட்ட மக்கள் நீதிமன்றம், அரசை அணுக அறிவுரை

வன உரிமை பட்டா கேட்ட மக்கள் நீதிமன்றம், அரசை அணுக அறிவுரை

ADDED : ஜூலை 05, 2024 01:05 AM


Google News
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே தும்பல் வனச்சரகம், பாப்பநா-யக்கன்பட்டியில் வன உரிமை பட்டா கேட்டு, வனப்பகுதிக்குள் சென்று பழங்குடியின மக்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பேச்சு நடத்தி தீர்வு காணப்-படும் என, போலீசார், வனத்துறையினர் தெரிவித்தனர். நேற்று காட்டுக்கோட்டையில் உள்ள, ஆத்துார் வனக்கோட்ட அலுவலகத்தில் பழங்குடி மக்களுடன் பேச்சு நடந்தது. அப்போது மக்கள், '2006 வன உரிமை சட்டப்படி பழங்குடி மக்க-ளுக்கு வன உரிமை பட்டா வழங்க வேண்டும். மனு அளித்த சில-ருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதி உள்ளவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும்' என்றனர்.மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர், 'பாப்பநாயக்-கன்பட்டியில் உள்ள இடம், 1973 டிச., 28ல், வனத்துறையின் காப்-புக்காடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை, வன உரிமை சட்டப்படி பட்டா வழங்க இயலாது. நீதிமன்றம் அல்லது தமிழக அரசை அணுகி, பட்டா பெற முயற்சிக்க வேண்டும்' என்றார்.அதை ஏற்ற மக்கள், கலந்து ஆலோசித்து முடிவு செய்வதாக கூறி சென்றனர். இதில், ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார், ஆதிதிரா-விடர் நலத்துறை தாசில்தார் ஜெயலட்சுமி உள்ளிட்ட அலுவ-லர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us