/உள்ளூர் செய்திகள்/சேலம்/மது விற்ற மூதாட்டி ஓராண்டுக்கு பின் கைதுமது விற்ற மூதாட்டி ஓராண்டுக்கு பின் கைது
மது விற்ற மூதாட்டி ஓராண்டுக்கு பின் கைது
மது விற்ற மூதாட்டி ஓராண்டுக்கு பின் கைது
மது விற்ற மூதாட்டி ஓராண்டுக்கு பின் கைது
ADDED : ஜூலை 12, 2024 07:23 AM
மேட்டூர்: மேச்சேரி, கோட்டையான் தெருவை சேர்ந்தவர் சந்திரா, 56.
இவர் சட்டவிரோதமாக டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தார். இதனால் மேச்சேரி போலீசார், நேற்று சந்திராவை கைது செய்து, அவரிடம் இருந்த, 15 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் கருமலைக்கூடல் எல்லைக்குட்பட்ட தேசாய் நகரை சேர்ந்த கல்யாணி, 52, என்பவர் மதுபானம் விற்றார். கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிய நிலையில், ஓராண்டாக தலைமறைவாக இருந்தார். அவர், தேசாய் நகருக்கு நேற்று வந்த நிலையில், போலீசார் கைது செய்தனர்.சாராய ஊறல் அழிப்புபெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்வராயன்மலையில் உள்ள பாச்சாடு, மாமரத்துக்காட்டில் நேற்று முன்தினம் கருமந்துறை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பாச்சாடு நீரோடை பகுதியொட்டி சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருந்தது தெரிந்தது. இதனால், 3 பேரல்களில் இருந்த, 400 லிட்டர் ஊறலை கொட்டி அழித்தனர். ஊறல் போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.