/உள்ளூர் செய்திகள்/சேலம்/ராசிபுரத்துக்கு பஸ் இல்லை: ஆத்துாரில் பயணியர் அவதிராசிபுரத்துக்கு பஸ் இல்லை: ஆத்துாரில் பயணியர் அவதி
ராசிபுரத்துக்கு பஸ் இல்லை: ஆத்துாரில் பயணியர் அவதி
ராசிபுரத்துக்கு பஸ் இல்லை: ஆத்துாரில் பயணியர் அவதி
ராசிபுரத்துக்கு பஸ் இல்லை: ஆத்துாரில் பயணியர் அவதி
ADDED : ஜூலை 08, 2024 04:52 AM
ஆத்துார் : ராசிபுரத்துக்கு பஸ் இல்லாததால், ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில், ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் பயணியர் காத்தி-ருந்து அவதிக்குள்ளாகினர்.
சேலம் மாவட்டம் ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ராசி-புரம், நாமக்கல், ஈரோடு பகுதிகளுக்கு, ஆத்துார், நாமக்கல், ராசி-புரம் கிளை பணிமனைகள் மூலம், 'மப்சல்' பஸ்கள் இயக்கப்படு-கின்றன. நேற்று இரவு, 8:00 மணி முதல் ஆத்துாரில் இருந்து ராசிபுரம் - நாமக்கல் தடத்தில் அரசு பஸ்கள் இயக்கப்பட-வில்லை.
இதனால், 100க்கும் மேற்பட்ட பயணியர், ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் காத்து கிடந்து சிரமத்துக்கு ஆளாகினர். தொடர்ந்து பஸ் ஸ்டாண்டில் உள்ள நேர கண்காணிப்பு அலுவலகத்தை முற்-றுகையிட்டு, போக்குவரத்து அலுவலர்களிடம், பயணியர் வாக்கு-வாதம் செய்தனர். பின் இரவு, 9:30 மணிக்கு, ஆத்துார் - ராசிபு-ரத்துக்கு மப்சல் பஸ் வந்தது. அதில் பயணியர், இட
நெருடிக்கடியில் சென்றனர்.
வேறு தடத்தில் இயக்கம்
இதுகுறித்து பயணியர் கூறியதாவது: ஆத்துார் - ராசிபுரம், நாமக்கல் தடத்தில் இரவு, 8:00 மணி, 8:30 மணிக்கு இயக்கப்-படும் இரு பஸ்களை, கள்ளக்குறிச்சி
க்கு சிறப்பு பஸ்களாக இயக்கிவிட்டனர். இதனால் ராசிபுரம், மெட்டாலா, நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதி முதியோர், பெண்கள், பலர் குழந்தைகளுடன், ஒன்றரை மணி நேரம் காத்துக்-கிடந்தோம். பஸ் குறித்து கேட்ட பின், 9:40 மணிக்கு இயக்கப்-பட்டது. ஞாயிறு, முகூர்த்த நாட்களில் இதுபோன்று பஸ்களை வேறு தடத்தில் இயக்குவதால் அவதிப்படுகிறோம். வழித்தட பஸ்களை வழக்கமாக இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
குழப்பம்
ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊனத்துாருக்கு டவுன் பஸ்(தடம் எண்: 12) இயக்கப்படுகிறது. அதில் டிஜிட்டல் பெயர் பலகை உள்ளது. நேற்று மதியம், 2:30 மணிக்கு ஆத்துார் வந்தபோது பெயர் பலகையில் ஊனத்துார் வழி - தலைவாசல், சிறுவாச்சூர் என குறிப்பிடுவதற்கு பதில், 'கள்ளக்குறிச்சி வழி பள்ளிபாளையம்' என தவறுதலாக இருந்தது. இதனால் பயணியர் குழப்பம் அடைந்தனர். ஒருவழியாக டிரைவரிடம் கூற, பின் பெயர் பலகையில் ஊர் பெயர் மாறி இருப்பது தெரிந்து சரிசெய்யப்பட்டதால் பயணியர் ஏறினர்.