ADDED : ஜூலை 08, 2024 04:53 AM
சேலம் : சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழா கட்டுரை, பேச்சுப்-போட்டி, நாளை நடக்க உள்ளது. அதில் பங்கேற்க உள்ள, 6 முதல், பிளஸ் 2 வரையான மாணவ,மாணவியர், போட்டி நடக்கும், சேலம், கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு, காலை, 9:00 மணிக்குள் வர வேண்டும்.
இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் மூலம் பள்ளிகளுக்கு சுற்-றறிக்கை அனுப்பி கீழ்நிலையில் கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தி, முதன்மை கல்வி அலுவலரால் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மூலம் இப்போட்டி நடக்க உள்ளது. இதில் பங்-கேற்போர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் உரிய விண்ணப்-பத்தில் பரிந்துரை பெற்று, போட்டி நடக்கும் நாளில் முன்னதாக வந்து, பெயர் பதிவு செய்ய வேண்டும்.
'ஆட்சிமொழி தமிழ்' தலைப்பில் கட்டுரைப்போட்டி, 'குமரி தந்தை மார்சல் நேசமணி, தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கருணாநிதி' ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடக்க உள்ளது. இதில் முதல் பரிசு, 10,000 ரூபாய், 2ம் பரிசு, 7,000, 3வது பரிசு, 5,000 ரூபாய் மற்றும் சான்-றிதழ் வழங்கப்படும். அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்க, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.