/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரயில்வே பாலத்தில் 'குடி'மகன்கள் கும்மாளம் பெண்கள் அச்சத்தை போக்குவரா போலீசார்? ரயில்வே பாலத்தில் 'குடி'மகன்கள் கும்மாளம் பெண்கள் அச்சத்தை போக்குவரா போலீசார்?
ரயில்வே பாலத்தில் 'குடி'மகன்கள் கும்மாளம் பெண்கள் அச்சத்தை போக்குவரா போலீசார்?
ரயில்வே பாலத்தில் 'குடி'மகன்கள் கும்மாளம் பெண்கள் அச்சத்தை போக்குவரா போலீசார்?
ரயில்வே பாலத்தில் 'குடி'மகன்கள் கும்மாளம் பெண்கள் அச்சத்தை போக்குவரா போலீசார்?
ADDED : ஜூலை 08, 2024 04:52 AM
ஆத்துார் : மந்தைவெளி ரயில்வே பாலத்தில் அமர்ந்து, 'குடி'மகன்கள் மது அருந்துவதோடு, பாட்டில்களை உடைத்து விடுகின்றனர். தொடர்ந்து சிலர் ரகளையில் ஈடுபடுவதால் அந்த வழியே நடந்து செல்லவே பெண்கள் அச்சப்படுகின்றனர். இதனால்
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்துார், மந்தைவெளி வழியே, ஆத்துார் - கடம்பூர் நெடுஞ்சாலை மற்றும் சேலம் - விருதாசலம் அகல ரயில் பாதை செல்கிறது. அங்கு ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்-ளது. அந்த பாலத்தில் அமர்ந்து இரவில் மட்டுமின்றி பகலி-லேயே பலரும், மது அருந்தும் இடமாக மாற்றிவிட்டனர். சிலர், அந்த பாட்டில்களை, ரயில்வே பாதையிலேயே உடைத்து விடு-கின்றனர். இதனால் ரயில்வே பாதை சீரமைப்பு பணியில் ஈடு-படும் ஊழியர்களின் கால்களை பதம்பார்க்கின்றன. அத்துடன் மதுபாட்டில், போதை பொருட்கள் விற்பனை செய்யும் இடமாக, அந்த பாலத்தை சிலர் மாற்றிவிட்டதாக, மக்கள் குற்றம்சாட்டு-கின்றனர்.
தவிர அப்பகுதி மக்களுக்கு போதிய கழிப்பிட வசதி இல்லை. இதனால் ரயில்வே பாதையின் கீழ் உள்ள முட்புதரை, அப்பகுதி பெண்கள் உள்ளிட்டோர், திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு, 'குடி'மகன்களால் தொந்த-ரவு ஏற்படுவதால், அந்த வழியே செல்லவே, பல பெண்கள் அச்-சப்படுகின்றனர். மேலும் அப்பகுதியையொட்டி சில மாதங்க-ளுக்கு முன், இறைச்சி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மாடுகளை வெட்டி அதன் கழிவை, ஒட்டியுள்ள சாக்கடையில் வீசுகின்றனர். இதனால் சாக்கடையில் புழுக்கள் உற்பத்தியாகி துர்-நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் கூறுகையில், ''சமூக விரோத குற்றச்செயல்கள் குறித்து ஆய்வு செய்து நடவ-டிக்கை எடுக்கப்படும். சாலையை ஆக்கிரமித்து இறைச்சி கடைகள் வைத்திருந் தால் நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்-படும்,'' என்றார்.
நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால் கூறுகையில், ''பால பகுதியில் கூடுதலாக கழிப்பிடம் கட்ட ஆய்வு செய்யப்பட்டுள்-ளது,'' என்றார்.
சாக்கடை நாறுது!
மந்தைவெளி ரயில்வே பாலத்தின் மீது மது அருந்துவது தற்-போது அதிகரித்துள்ளது. போதையில் உள்ளவர்களால், அந்த வழியே செல்ல மக்கள்
அச்சப்படுகின்றனர். சாலையோரம் அனுமதியின்றி வைக்கப்பட்-டுள்ள இறைச்சி கடைகளால், அங்கேயே மது அருந்துவது உள்-ளிட்ட செயல்கள் நடக்கின்றன. இறைச்சி கடைகளை அகற்றி, துர்நாற்றம் வீசும் சாக்கடையை சுத்தப்படுத்த வேண்டும். பெண்க-ளுக்கு கூடுதல் கழிப்பிடம் கட்ட வேண்டும்.
- எம்.முருகன், 45,
கட்டடத்தொழிலாளி, அம்பேத்கர் நகர்.
தொந்தரவு அதிகரிப்பு
மந்தைவெளி மக்களுக்கு போதிய கழிப்பிடம் இல்லாததால் ரயில்வே பாதையையொட்டி திறந்தவெளியில் செல்கின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவியர் செல்லும்போது, சில வாலிபர்கள் தொந்தரவு செய்கின்றனர். 'போதை'யில் உள்ள வாலிபர்கள், அந்த வழியே செல்லும் வாகனங்களை நிறுத்தியும் தகராறு செய்கின்றனர். பெண்கள், அந்த வழியில் நடந்து செல்-லவே முடியவில்லை. 'போதை' வாலிபர்களின் தொந்தரவு இரு ஆண்டாக அதிகரித்துள்ளது.
- எம்.மகாலட்சுமி, 30,
இல்லத்தரசி, மந்தைவெளி.
பாதுகாப்பு வேண்டும்
மந்தைவெளி வழியே கடம்பூர், கூலமேடு, கெங்கவல்லி, கூட-மலை, தம்மம்
பட்டி பகுதிகளுக்கு பஸ்கள், பள்ளி, கல்லுாரி வேன்கள் சென்று வருகின்றன. நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லும் பிரதான சாலை. அச்சாலையை ஆக்கிரமித்து கடை, தள்ளுவண்டி நிறுத்து தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். ரயில் பாதையோர முட்புதர்களை அகற்றி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.மணி, 33,
கட்டட மேஸ்திரி, பைத்துார் சாலை.