/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம்
100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம்
100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம்
100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம்
ADDED : ஜூலை 08, 2024 04:51 AM
ஓமலுார் : ஓமலுார் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சக்ரவர்த்தி அறிக்கை:
நடப்பாண்டில் ஓமலுார் வட்டத்தில், 200 ஏக்கரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க, 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியத்துடனும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள பெரு விவசா-யிகளுக்கு, 75 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.
ஓமலுார் வட்டத்தில் உள்ள காய்கறி, பழப்பயிர், பூக்கள், மஞ்சள் விவசாயிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விளை பொருட்-களின் உற்பத்தியை அதிகரித்து லாபம் பெற வேண்டும். விபரம் பெற, ஓமலுார் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை சந்தித்து பயன்பெறலாம்.