2 இடங்களில் குழந்தையுடன் தாய் மாயம்
2 இடங்களில் குழந்தையுடன் தாய் மாயம்
2 இடங்களில் குழந்தையுடன் தாய் மாயம்
ADDED : ஜூன் 05, 2025 01:17 AM
காரிப்பட்டி,காரிப்பட்டி, சர்க்கார் நாட்டாமங்கலத்தை சேர்ந்த, கொத்தனார் கவுதம், 25. இவரது மனைவி ஜனனி, 19. இவர்களுக்கு 6 மாதத்தில், லக் ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது. ஜனனி, குழந்தையுடன், கடந்த, 3ல், ஜலகண்டாபுரத்தில் உள்ள பாட்டி சாந்தி வீட்டுக்கு சென்றார். பின் அங்கிருந்து, அவரது
வீட்டுக்கு செல்வதாக தெரிவித்து சென்றார். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. எங்கு தேடியும் காணாததால், ஜனனி, குழந்தையை கண்டுபிடிக்கும்படி, கவுதம் நேற்று அளித்த புகாரால், காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவம்
சேலம், மணியனுாரை சேர்ந்த, கணேஷ் மனைவி பேபி ஷாலினி, 24. இவர்கள், 6 ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் வேதனையடைந்த பேபி ஷாலினி, இரண்டாவது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இரவு வரை வராததால், கணேஷ் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.