/உள்ளூர் செய்திகள்/சேலம்/கிரிக்கெட்டில் பரிசு பெற்றதால் முதியோருக்கு உணவு வழங்கல்கிரிக்கெட்டில் பரிசு பெற்றதால் முதியோருக்கு உணவு வழங்கல்
கிரிக்கெட்டில் பரிசு பெற்றதால் முதியோருக்கு உணவு வழங்கல்
கிரிக்கெட்டில் பரிசு பெற்றதால் முதியோருக்கு உணவு வழங்கல்
கிரிக்கெட்டில் பரிசு பெற்றதால் முதியோருக்கு உணவு வழங்கல்
ADDED : ஜூன் 05, 2025 01:18 AM
ஆத்துார், கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில், கோட்ட அளவில் கிரிக்கெட் போட்டி நடந்தது. அதில், 2ம் இடம் பிடித்த, தமிழ்நாடு நோவா கிரிக்கெட் குழுவினர், 15,000 ரூபாய் பரிசுத் தொகை பெற்றனர். அவர்கள் நேற்று,
ஆத்துார், மஞ்சினியில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் காப்பகத்துக்கு சென்றனர். அங்கு முதியோர்களுக்கு அறுசுவை உணவுகள் வழங்கி, ஆசீர்வாதம் பெற்றனர். இதுகுறித்து கிரிக்கெட் குழுவினர் கூறுகையில், 'போட்டியில் பெற்ற பணத்தின் ஒரு பகுதியை, ஆதரவற்றோருக்கு உணவாக வழங்கியது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியது' என்றனர்.