/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தொழிலாளி விரல்கள் இயந்திரத்தில் சிக்கின தொழிலாளி விரல்கள் இயந்திரத்தில் சிக்கின
தொழிலாளி விரல்கள் இயந்திரத்தில் சிக்கின
தொழிலாளி விரல்கள் இயந்திரத்தில் சிக்கின
தொழிலாளி விரல்கள் இயந்திரத்தில் சிக்கின
ADDED : ஜூன் 05, 2025 01:17 AM
மேட்டூர், மேட்டூர், கருமலைக்கூடலை சேர்ந்த, குருமூர்த்தி மகன் நிஜந்தன், 21. மேட்டூர், காவேரிகிராஸ் முனியப்பன் கோவில் எதிரே உள்ள, தனியார் இன்டர்லாக் பிரிக்ஸில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம், நிஜந்தன் வேலைக்கு சென்றார். மதியம், 12:20 மணிக்கு, இயந்திர சுவிட்ச் மீது, நிஜந்தன் வயிறு பட்டுள்ளது. அப்போது சுவிட்ச், 'ஆன்' ஆகி, இயந்திரம் ஓடத்தொடங்கியது.
இதில் நிஜந்தனின் இடது கை பட்டு, விரல்கள் நசுங்கி ரத்தக்காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அருகே உள்ள பேக்கரி டீ மாஸ்டர் செந்தில்குமார் ஓடி வந்து, இயந்திரத்தை நிறுத்தினார். பின் நிஜந்தன், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.