/உள்ளூர் செய்திகள்/சேலம்/வாலிபரிடம் வழிப்பறி; 2 திருநங்கையர் கைதுவாலிபரிடம் வழிப்பறி; 2 திருநங்கையர் கைது
வாலிபரிடம் வழிப்பறி; 2 திருநங்கையர் கைது
வாலிபரிடம் வழிப்பறி; 2 திருநங்கையர் கைது
வாலிபரிடம் வழிப்பறி; 2 திருநங்கையர் கைது
ADDED : ஜூன் 20, 2024 07:26 AM
சேலம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், மொரம்பு அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் மாரிமுத்து, 38.
இவர் தொழில் நிமித்தமாக சேலம் வந்தவர், பின் சொந்த ஊர் செல்ல, நேற்று மதியம், 2:00 மணிக்கு சேலம் புது பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார். அப்போது, 5 ரோடு, கார்கானா தெருவை சேர்ந்த திருநங்கையர் அக்ஷரா, 21, அகல்யா, 25, ஆகியோர், மாரிமுத்துவிடம் வந்து பேச்சு கொடுத்தனர். தொடர்ந்து அவர் பாக்கெட்டில் இருந்த, 4,000 ரூபாயை எடுத்து கொண்டு மிரட்டிச்சென்றனர். இதுகுறித்து மாரிமுத்து புகார்படி, பள்ளப்பட்டி போலீசார், திருநங்கையர் இருவரையும் கைது செய்து பணத்தை மீட்டனர்.