ADDED : ஜூன் 20, 2024 07:26 AM
ஆத்துார்: கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து, 15 பேர் உயிரிழந்ததால் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் நேற்று சாராய விற்பனை குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதில் தலைவாசல் அருகே சிறுவாச்சூரில் வீட்டில் சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட ராமசாமி, 58, காமக்காபாளையம் பெரியம்மாள், 60, வடகுமரை சிவகாமி, 60, கருமந்துறை, குன்னுார் பால்ராஜ், 25, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம், 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.