திருநங்கையருக்கு நாளை சிறப்பு முகாம்
திருநங்கையருக்கு நாளை சிறப்பு முகாம்
திருநங்கையருக்கு நாளை சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 20, 2024 07:26 AM
சேலம்: திருநங்கையருக்கு முழுமையான சமூக பாதுகாப்பு, சமூக அங்கீகாரத்தை அளித்து, நாட்டில் முதல் மாநிலமாக, தமிழகத்தில் திருநங்கை நலவாரியம், 2008ல் தொடங்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் சிறப்பு முகாம் நடத்தி, திருநங்கையரின் எண்ணிக்கை விபரத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விளிம்பு நிலையில் உள்ள திருநங்கையருக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க, சேலம் கலெக்டர் அலுவலக வளாக அறை எண்: 12ல், நாளை சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் திருநங்கையர், உரிய விபரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை, சுயதொழில் மானியம், திறன் பயிற்சி உள்ளிட்ட பயன்களை அடையலாம் என, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.