/உள்ளூர் செய்திகள்/சேலம்/இலக்கின்படி நாற்று நட கலெக்டர் அறிவுரைஇலக்கின்படி நாற்று நட கலெக்டர் அறிவுரை
இலக்கின்படி நாற்று நட கலெக்டர் அறிவுரை
இலக்கின்படி நாற்று நட கலெக்டர் அறிவுரை
இலக்கின்படி நாற்று நட கலெக்டர் அறிவுரை
ADDED : ஜூன் 20, 2024 07:25 AM
ஆத்துார்: 'உங்களைத்தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம், தலைவாசல் தாலுகாவில் நேற்று நடந்தது.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். தாலுகாவின் பல்வேறு பகுதிகளில், கள ஆய்வு பணியில் பல்வேறு துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். மணிவிழுந்தான் ஊராட்சியில் விளையாட்டு மையம், நர்சரியில் ஆய்வு செய்தபோது, குறைந்த அளவில் நாற்றுகள் இருந்தன. இலக்கின்படி, 1,000 மரக்கன்று நாற்றுகள் உற்பத்தி செய்ய, கலெக்டர் அறிவுறுத்தினார். அப்போது குடிநீர் பற்றாக்குறை உள்ளதாக, மக்கள் மனு அளித்தனர். மதியம், 2:30 முதல், 5:00 மணி வரை, தலைவாசல் தாலுகா அலுவலகத்தில்கள அலுவலர்கள், அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டத்தை கலெக்டர் நடத்தினார். தொடர்ந்து சாலை, தெருவிளக்கு செயல்பாடுகள், பூங்கா, நுாலகம், பஸ் ஸ்டாண்ட், அரசு விடுதி, சமுதாய கழிப்பறைகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். உதவி கலெக்டர் ஆக்ரிதிசேத்தி(பயிற்சி), டி.ஆர்.ஓ., மேனகா, ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, தாசில்தார் அன்புச்செழியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.