உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.70
உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.70
உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.70
ADDED : ஜூன் 20, 2024 07:25 AM
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர், குள்ளம்பட்டி, மேட்டுப்பட்டி, சிங்கிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி பரவலாக பயிரிடப்பட்டுள்ளது.
அங்கு விளைவிக்கப்படும் தக்காளியை, வாழப்பாடியில் உள்ள உழவர் சந்தைக்கு கொண்டு வந்து உழவர்கள் விற்கின்றனர். இரு நாட்களுக்கு முன், கிலோ, 55 ரூபாய்க்கு விற்ற தக்காளி, நேற்று முன்தினம் உழவர் சந்தையில், 10 ரூபாய் உயர்ந்து, 65 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மேலும், 5 ரூபாய் அதிகரித்து, கிலோ, 70 ரூபாய்க்கு விற்பனையானது. விளைச்சல் குறைவால் தக்காளி விலை உயர்ந்து வருவதாக, உழவர் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.