அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு
அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு
அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு
ADDED : செப் 19, 2025 01:23 AM
சேலம் :இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கான, சேலம் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர் பதவிக்காலம், சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. இதனால் புது தலைவர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி, சேலம் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக, ஏற்கனவே தலைவராக இருந்த முருகன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். உறுப்பினர்களாக, அரிசிபாளையம் தவமணி, ஓமலுார் அருகே கோட்டகவுண்டம்பட்டி அழகிரி, இடைப்பாடி, கோரணம்பட்டி செல்வம், மேட்டூர் மூலக்கரடு பழனியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவியேற்பு விழா, கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து, தலைவர், உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து அவர்கள் உறுதிமொழி ஏற்றனர். எம்.பி.,க்கள் செல்வகணபதி, சிவலிங்கம், அறநிலையத்துறை சேலம் மாவட்ட உதவி கமிஷனர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.