/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆடிட்டர் மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம் ஆடிட்டர் மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம்
ஆடிட்டர் மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம்
ஆடிட்டர் மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம்
ஆடிட்டர் மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம்
ADDED : செப் 19, 2025 01:23 AM
சேலம் :விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆடிட்டரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, நுரையீரல் கோவைக்கும், சிறுநீரகங்கள் சென்னைக்கும் அனுப்பப்பட்டன.
சேலம், மரவனேரி, ஐஸ்வர்யம் கார்டனை சேர்ந்தவர் கணேஷ்குமார், 47. ஆடிட்டர். இவரது மனைவி கல்பனா, 43, மகன் ராதேசியாம், 22. கடந்த செப்., 14ல், கணேஷ்குமார், சேலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஏற்காடு மலைக்கு சென்று கொண்டிருந்தார். 12வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, எதிரே வந்த கார் மோதி, கணேஷ்குமார் படுகாயம் அடைந்தார். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, குடும்பத்தினர் முன்வந்தனர்.
அதன்படி நேற்று சேலம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு, ஒரு நுரையீரல், இரு சிறுநீரகங்கள், இரு கண்கள் தானமாக பெறப்பட்டன. நுரையீரல், கோவை தனியார் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் சென்னை தனியார் மருத்துவமனைக்கும், கண்கள், சேலம் அரசு மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. சேலம் அரசு மருத்துவமனை டீன் தேவி மீனாள் தலைமையில் மருத்துவர்கள், கணேஷ்குமார் உடலுக்கு அரசு மரியாதை செய்தனர்.