/உள்ளூர் செய்திகள்/சேலம்/அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்
அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்
அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்
அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 16, 2024 02:04 AM
ஓமலுார்: அரசு உதவி பெறும் பள்ளியில், காலை உணவு திட்டம் துவக்க விழா நடைபெற்றது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி களில், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டுள்ளது. ஓமலுார் ஆர்.சி.,செட்டிப்பட்டியில் உள்ள புனித நிக்கோலாஸ் நடுநிலைப் பள்ளியில், கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் எம்.பி.,செல்வகணபதி, சேலம் வடக்கு எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தனர்.
இதில், மாணவர்களுக்கு பொங்கல், உப்புமா வழங்கப்பட்டது. 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உணவருந்தினர். இதேபோல், ஓமலுார் ஒன்றியத்தில் தும்பிப்பாடி, சிக்கம்பட்டி, நாரணம்
பாளையம், வெள்ளக்கல்பட்டி, காடையாம்பட்டி தாலுகாவில் டேனிஷ்பேட்டையில் உள்ள ஆண்டரசன் துவக்கப்பள்ளியிலும் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது.
மேட்டூர் சப்-கலெக்டர் பொன்மணி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ், ஓமலுார் தி.மு.க., ஒன்றிய செயலர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர்கள் சண்முகம், அழகிரி, காமலாபுரம் பஞ்.,தலைவர் பழனிகவுண்டர், பள்ளி தாளாளர் ஜோசப்ப-வுல்ராஜ் உடனிருந்தனர்.