/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆஷாட நவராத்திரி நிறைவு விழா; அலங்காரத்தில் வாராஹி அம்மன் ஆஷாட நவராத்திரி நிறைவு விழா; அலங்காரத்தில் வாராஹி அம்மன்
ஆஷாட நவராத்திரி நிறைவு விழா; அலங்காரத்தில் வாராஹி அம்மன்
ஆஷாட நவராத்திரி நிறைவு விழா; அலங்காரத்தில் வாராஹி அம்மன்
ஆஷாட நவராத்திரி நிறைவு விழா; அலங்காரத்தில் வாராஹி அம்மன்
ADDED : ஜூலை 16, 2024 02:04 AM
ஓமலுார்: ஓமலுாரில் உள்ள, பர்வதவர்த்தினி சமேத சுயம்புநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள, வரம் தரும் வாராஹி அம்மனுக்கு கடந்த, 6ல் ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது, தினந்தோறும், வாராஹி அம்மனுக்கு மகா ஹோமம் மற்றும் பல்-வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்கரித்து தீபாரதனை காட்டப்பட்டது.
ஆஷாட நவராத்திரி விழா நிறைவு நாளான நேற்று, அம்மனுக்கு பல்வேறு கனி வகைகளால் அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. கோவில் வளாகத்தில் அம்மன் மூன்று முறை வலம் வந்து, விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. திரளான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.